அன்று அவள் அங்கு இருந்திருக்கவில்லை. மனம் படபடத்தது. அவன் கண்கள் எல்லா திசைகளிலும் அவளைத் தேடியது. அவள் தோழிகளிடம் சென்று கேட்டு விடுவோம் என்று எண்ணியிருந்தான். அவர்களை நோக்கி அடியெடுத்துவைத்தான். யாரும் அவன் அவளைப் பார்ப்பதைப் பார்த்து விடக்கூடாது என்பதில் தீர்மானமாய் இருந்தான் இவ்வளவு நாளும். சற்று தொலைவில் மெல்லியதாய் ஒரு குரல். தன் கழுத்தை மெதுவாக திருப்பினான். அவள் தான். அவன் உதட்டில் மெல்லியதாய் ஒரு புன்னகை.
......
2 மாதங்களுக்கு முன்பு,
மதியம் 12 மணி,
அவனுடைய வேலை அப்பொழுது தான் முடிந்திருந்தது.
"டேய், வாடா கேன்டீன் போலாம். எனக்கு பசிக்குது. வாங்கிக் குடுடா."
"டேய் கையில காசு இல்ல டா. நாளிக்கு வேணா எடுத்துண்டு வரேன் டா"
"போடா நாயே!"
"டேய் யாருடா அவ?"
"எவ டா?"
"அங்க போறா பாரு அந்த ரெட் கலர் சுடிதார் டா!"
"அவளா! ஆமா அவளைப் பத்தி உனக்கு ஏன் தெரியனும்? தம்பி நீ செரியில்ல!"
"டேய் சும்மா தான் கேட்டேன்! சொல்ல மாட்டேன் நா போடா!"
மதியம் 1 மணி,
அவள் எந்த செக்க்ஷன்ல வொர்க்க் பண்றா என்று கண்டுபிடிச்சிடனும் என்ற எண்ணததோட அவ பின்னாடி போனான். அக்கவுண்ட்ஸ் செக்க்ஷன்ல ரூம் நெம்பர் 10 தான். போயி பேசிடலாம்னு கிட்ட போனான். பேச்சே வரல.
.....
1 மாதத்துக்கு முன்,
"டேய், அவள ரொம்ப புடிச்சுர்க்கு டா. நீ தான் டா ஹெல்ப் பண்ணனும். உன்ன விட்டா வேற யாருடா இருக்கா எனக்கு?"
"நண்பேன் டா! நா ஹெல்ப் பண்றேன்டா உனக்கு!"
......
இப்பொழுது,
ஒரு நாள் அவள் இருக்கும் இடம் அருகில் சென்று உட்கார்ந்தான் தன் நண்பனோடு. அவள் பேசிக்கொண்டிருந்ததை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஏண்டி சுபா, உன்ன எவ்வளவோ பேரு பொண்ணு பாத்துட்டா. ஏண்டி யாருக்கும் பதில் சொல்லல? ஆத்துல வேணாம்னு சொல்லிட்டாளா ?"
"அப்படிலாம் இல்லடி. எனக்கு வயலின் நா ரொம்ப இஷ்டம்னு உனக்கே தெரியும். சின்ன வயசுல நா வயலின் கத்துக்கணும்னு அப்பா கிட்ட கேட்டதுக்கு பாட்டும் பரதமும் கத்துக்கோ போதும்னு சொல்லிட்டாடி"
"என்ன சொல்ல வர ?"
"வயலின் நன்னா வாசிக்க தெரிஞ்ச ஒருத்தர தான் கல்யாணம் பண்ணிப்பேன்டி!"
........
1 மாதத்துக்குப் பின்,
அவர்கள் இருவரும் பேச ஆரம்பித்து 15 நாட்கள் ஆகியிருந்தது. நல்ல நட்பாக வளர்ந்தது. எல்லாவற்றையும் அவனுடன் பகிர்ந்து கொள்வாள். அவன் தன் விருப்பத்தை சொல்வதற்குப் பயமாக இருந்தது. எங்கே அவள் பேசுவதை விட்டு விடுவாளோ என்ற பயம்!
......
2 மாதங்களுக்குப் பின்,
"இன்னிக்கு கண்டிப்பா சொல்லிடறேன் டா !"
"கிழிச்ச!"
நேரில் பேச முடியாது என்று எஸ்.எம்.எஸ்-ல் சொல்லி விடலாம்னு முடிவு செய்து மெசேஜ் அனுப்பினான்.
"ஹாய்"
"ஹாய் டா"
"என்ன பண்ற?"
"டி.வி. பாக்கறேன்டா. நீ?"
"புஸ்தகம் படிக்கரேன்டி. சாப்டியா?"
"இல்ல இனி தான். நீ சாப்டியா?"
"சாப்ட்டுடேன்டி."
"அப்பறம் டா?"
(சொல்லலாமா வேணாமா- குழப்பம்)
"ஒண்ணுமில்லடி"
(முடியவில்லை அவனால்)
"டேய், அம்மா கூப்பட்ரா என்ன. போயிட்டு வரேன். அப்பறமா மெசேஜ் பண்றேன் டா! அப்பறம் ஒரு விஷயம், சீக்கரமா வயலின் நன்னா கத்துக்கோடா "
.
.
.
அவனுக்கு மெதுவாகத் தான் புரிந்தது. சந்தோஷத்தில் பறந்தான்.
.
.
.
வளையோசை கலகல கலகலவென கவிதைகள் படிக்குது!!!